மே 9 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேர் குருநாகல் மற்றும் மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களால் கைது

#SriLanka #Protest #Arrest
Prasu
3 years ago
மே 9 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேர் குருநாகல் மற்றும் மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களால் கைது

மே 9 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (26) குருநாகல் மற்றும் மேல் மாகாண தெற்கு  பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி நடைபெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்   பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான யூ.கே.சுமித் உடுகும்புர, மற்றும் பிரேமநாத் சீ தொலவத்த  ஆகியோரின் வீடுகளுக்கு மற்றும் வாகனங்கள் உட்பட சொத்துகளுக்கு தேசம் விளைவித்தமை மற்றும் தீ முட்டியமை தொடர்பில் சந்தேக நபர்கள் குருநாகல் மற்றும் மேல் மாகாண  தெற்கு   குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 53 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்  அவர்கள் வெலிவிட்ட, ஹோமாகம, தரம்பொல மற்றும் பன்லியத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேகநபர்கள் குருநாகல் மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4