விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவரத் திட்டம்: முன்னாள் அமைச்சர்களுடன் கலந்துரையாடும் சந்திரிக்கா

Prathees
3 years ago
விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவரத் திட்டம்:  முன்னாள் அமைச்சர்களுடன் கலந்துரையாடும்  சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கைக் கட்சியின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய கட்சி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்களுடனும் முன்னாள் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

மேலும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பழைய உறுப்பினர்களுக்கு தொலைபேசி செய்திகளை வழங்கிஇ இது குறித்து தம்முடன் கலந்துரையாட வருமாறு கோரியுள்ளார்.

புதிய கட்சியில் இணையுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சியின் தலைமையகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி பத்தரமுல்லையில் ஸ்தாபிக்கப்படும் எனவும் அதன் பின்னர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் கட்சி அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியும் ஆசி வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4