தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக தாக்கி கைகால்களை எரித்த தாய் விளக்கமறியலில்

Prathees
3 years ago
தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக தாக்கி கைகால்களை எரித்த தாய் விளக்கமறியலில்

தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்து உடலை எரித்த சிறுமியின் தாயை பல்லேவெல பொலிசார் கைது செய்து அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (26) ஆஜர்படுத்தினர்.

 இதன்போது குறித்த தாயை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய மொஹமட் ரிஷாயி பாத்திமா என'ற பெண்ணே சிறையில் அடைக்கப்பட்டார்.

தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுடன் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அயல் வீட்டில் உள்ள பெண்ணிடம் சிறுமி கூறிய வதந்தியின் அடிப்படையில் சந்தேகமடைந்த தாய் வீட்டில் இரும்பு கரண்டியால் சூடாக்கி மகளின் கை, கால்களை எரித்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் ஒரு இளைய சகோதரனும் சகோதரியும் உள்ளனர்.

சிறுமி சித்திரவதை செய்யப்பட்ட போது இளைய சகோதரனும் சகோதரியும் வீட்டில் இருந்ததாகவும் தந்தை வேலைக்குச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பல்லேவெல பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4