இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் மட்டுமே பிரான்சில் தங்குவதற்கு அனுமதி

#France #Tourist
Prasu
3 years ago
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் மட்டுமே பிரான்சில் தங்குவதற்கு அனுமதி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் மட்டுமே பிரான்சில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிரெஞ்சு காரர்கள் பலர் ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். 

அதில் 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே முன்பு இருந்தது போல 180 நாட்களுக்கு விசா இல்லாமல் தங்கு முடியும் என்று நடைமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதற்கு பிரான்ஸ் அரசு 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது. இதில் எங்களால் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4