அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 28.08.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 28.08.2022

மேஷம்
அசுவினி: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: இன்று முடிவிற்கு வரவேண்டிய முயற்சி கடைசி நேரத்தில் தள்ளிப்போகும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு மறையும்.
கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும். அந்நியர்களை நம்பி ஈடுபடும் முயற்சி வீணாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வம்பு, வழக்குகளில் எதிர்மறை பலன்கள் ஏற்படலாம். மற்றவர் பிரச்னையில் தலையிட வேண்டாம்.
ரோகிணி: மகிழ்ச்சியான செயல்களில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் தோன்றும்.
மிருகசீரிடம் 1, 2: அடுத்தவரை நம்பி சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். சங்கடம் உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பொருளாதார நெருக்கடி விலகும். பழைய கடன் பைசலாகும்.
திருவாதிரை: புதிய முயற்சியில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர் துணையால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத வருமானத்தை அடைவீர்கள்

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: வார்த்தைகளில் கவனம் தேவை. பணம், நகைகள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூசம்: உங்கள் செயல்களில் நிதானம் அவசியம். குடும்பத்தினரால் சில நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம் நீங்கள் நினைப்பதற்கு மாறாக சில சம்பவம் நடைபெறும். உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும்.

சிம்மம்
மகம்: குழப்பம் அதிகரிக்கும் எதைச் செய்வது எதைத் தவிர்ப்பது என்ற முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடுவீர்கள்.
பூரம்: புதிய எண்ணம் உருவாகும். ஆசை அதிகரிக்கும். தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சி பாதகமாகும்.
உத்திரம் 1: பழைய எதிரிகள் பலம் பெறுவர். முயற்சிகளில் ஏதேனும் தடை உண்டாகி உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: செலவு அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் ஏற்படும். உங்கள் செயல் விடாமுயற்சியால் நிறைவேறும்.
அஸ்தம்: அத்தியாவசிய செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். பணம் பல வழிகளிலும் செலவாகி இருப்பு கரையும்.
சித்திரை 1, 2: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். வருவாய்க்கு மிஞ்சிய செலவு ஏற்படும்.

துலாம்
சித்திரை 3, 4: முயற்சிகள் வெற்றியாகும். அடிப்படைத் தேவை நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
சுவாதி: நண்பர்களிடம் கவனம் தேவை. அவசரப்பட்டு பிறருக்கு செய்யும் உதவியால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பாராத வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். செல்வாக்கு உயரும்.
அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
கேட்டை: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் அனுகுமுறையால் உறவினர் ஆதரவு கூடும்.

தனுசு
மூலம்: இருப்பிடத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மகிழ்வீர்கள்.
பூராடம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். எதிரிகளும் உங்களைத் தேடி வந்து சரணடைவார்கள்.
உத்திராடம் 1: விஐபிகளின் சந்திப்பால் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்பார்கள். நினைத்ததில் வெற்றி காண்பீர்கள்

மகரம்
உத்திராடம் 2, 3, 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை கிடைக்காமல் போகும்.
திருவோணம்: முயற்சி இழுபறியாகும். மனதைப் பாதிக்கும் வகையில் இன்று சில சம்பவங்கள் நடக்கலாம்.
அவிட்டம் 1, 2: அறிமுகம் இல்லாதவரை நம்பி செயலில் ஈடுபட வேண்டாம். புதிய முயற்சிகள் பலனின்றி போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பழைய பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: உறவினர்களிடம் ஏற்பட்ட பகை விலகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் திறமை இன்று வெளிப்படும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.

மீனம்
பூரட்டாதி 4: கோயில் தரிசனம் மகிழ்ச்சி தரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும்.
உத்திரட்டாதி: முயற்சி நிறைவேறும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தேவைக்காக கடன் வாங்குவீர்கள்.
ரேவதி: உங்களுடன் இருப்பவர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.