இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது கோட்டாபய போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரிக்கை

Kanimoli
3 years ago
இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது கோட்டாபய போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரிக்கை

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முப்பது இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும்  அறியமுடிகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4