மானிப்பாயில் வீடொன்றினுள் வன்முறை கும்பல் தாக்குதல்

Prathees
3 years ago
மானிப்பாயில் வீடொன்றினுள்  வன்முறை கும்பல்  தாக்குதல்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று  (28) அதிகாலை  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4