லிபியாவில் அரசு படை மற்றும் கிளர்ச்சியாளர்களிடையே மோதலில் 32 பேர் உயிரிழப்பு

Prasu
3 years ago
லிபியாவில் அரசு படை மற்றும் கிளர்ச்சியாளர்களிடையே மோதலில் 32 பேர் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சிபடையினருக்கும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. 

இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில்கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென்று மோதல் வெடித்தது.

அப்போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. அத்துடன் பல கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இந்த சூழ்நிலையில் லிபியாவில் நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 32 ஆக அதிகரிதுள்ளது. அத்துடன் 159 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4