முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார்! – சாகர காரியவசம்

Mayoorikka
3 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார்! – சாகர காரியவசம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போதைய நிலையிலும் மொட்டு கட்சியே பலமானதொரு அரசியல் இயக்கமாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4