அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 30.08.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 30.08.2022

மேஷம்
அசுவினி: தடைபட்ட செயல்கள் நடந்தேறும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
பரணி: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1: செயல்கள் நன்மையாகும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை வேலைகள் இழுபறியானாலும் மாலையில் முடிவிற்கு வரும்.
ரோகிணி: வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். எதிரிகள் விலகிச் செல்வர்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு மதியத்திற்கு மேல் நிறைவேறும். ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தாய்வழி உறவால் நன்மை சேரும். குடும்பத்தேவை நிறைவேறும். நிதானம் தேவை.
திருவாதிரை: மனம் அலைபாயும். நண்பர் ஆதரவுடன் உதவுவார்கள். முயற்சி நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அரசுவழி முயற்சி தாமதமாகும்.

கடகம்
புனர்பூசம் 4: செயல்களில் மதியத்திற்கு மேல் பின்னடைவு ஏற்படும். அரசு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
பூசம்: திட்டமிட்ட வேலைகளை மதியத்திற்குள் முடிப்பீர்கள். அதன்பின் செயல்களில் கவனம் தேவை.
ஆயில்யம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். மதியத்திற்கு மேல் தாய்வழி உறவுகளால் சங்கடம் வரலாம்.

சிம்மம்
மகம்: பேச்சில் கவனம் தேவை. கவனக் குறைவால் இன்று சில இழப்புகளை சந்திப்பீர்கள்.
பூரம்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் தள்ளிப்போன செயல்கள் முடியும்.
உத்திரம் 1: பணியித்தில் உண்டான பிரச்னையை சரிசெய்வீர்கள். பணம் பல வழிகளில் செலவாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: மதியம் வரையில் இருந்த நிலை அதன் பிறகு மாறும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் தேவை
அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். மதியத்திற்கு மேல் செலவு அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: மனக் குழப்பங்கள் விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபட்டு லாபம் காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: அலைச்சல் கூடும். சிலர் வெளியூர் பயணம் செல்வர். எதிர்பாராத செலவு ஏற்படும்.
சுவாதி: வீடு, வாகன வகையில் செலவு ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தடைபடும். நண்பரால் சங்கடம் வரலாம்.
விசாகம் 1, 2, 3: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். பய உணர்வால் முயற்சியில் கவனம் தேவை.

விருச்சிகம்
விசாகம் 4: மதியம் வரை எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் அலைச்சல், செலவு கூடும்.
அனுஷம்: விறுவிறுப்பாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். மதியத்திற்கு மேல் தடையை சந்திப்பீர்கள்.
கேட்டை: விறுவிறுப்பாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள். மதியத்திற்கு மேல் நெருக்கடி ஏற்படலாம்.

தனுசு
மூலம்: வியாபாரத்தை விரிவு செய்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத ஆதாயம் வரும்.
உத்திராடம் 1: செயல்கள் வெற்றி பெறும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: தடைபட்ட வேலை இன்று முடியும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம்: சங்கடங்கள் விலகும். பண வரவு தாராளமாகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம் 1, 2: உங்களது தனித்தன்மை வெளிப்படும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும்.
சதயம்: முயற்சித்தும் இழுபறியாக இருந்த வேலைகளில் பிற்பகலுக்கு மேல் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: சங்கடத்தில் இருந்து மீள்வீர்கள். அறிவாற்றலால் புதிய வழிமுறைகளைக் காண்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும். நண்பர் உதவியுடன் செயலை செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: விருப்பங்கள் நிறைவேறும். மனதை வாட்டிய பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.
ரேவதி: எதிர்பார்த்திருந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை உயரும்.