கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்

Mayoorikka
3 years ago
கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டையொன்றை 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4