பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தல்

Mayoorikka
2 years ago
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தல்

பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் வர்த்தமதனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலப்பொருட்களின் சிக்கல் அல்லது பிற நியாயமான உற்பத்தி சிக்கல்கள் இல்லாவிட்டால், பொருட்களின் உற்பத்தியாளர்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை பராமரிக்க வேண்டும்.
அச்சிடப்பட்ட அல்லது இலத்திரனியல் பற்றுச்சீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், பற்றுச்சீட்டின் பிரதியொன்றை விற்பனையாளரிடம் வைத்திருக்க வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.