இந்திய கோதுமை மா இறக்குமதி நிறுத்தம்.. மற்றுமொரு நெருக்கடியில் இலங்கை..

Prathees
2 years ago
இந்திய கோதுமை மா இறக்குமதி நிறுத்தம்.. மற்றுமொரு நெருக்கடியில் இலங்கை..

ரஷ்யா- உக்ரைனில்  யுத்தம் காரணமாக கோதுமை மா ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சு இந்நாட்டின்  கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன் காரணமாக இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு  கோதுமை மா இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது துருக்கியில் இருந்து  கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து விரைவாக கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும் என்றாலும்  துருக்கியில் இருந்து  கோதுமைவை இறக்குமதி செய்யும் போது சுமார் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக ஆர்டர் வழங்குவோர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சந்தையில் கோதுமை  மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடுஇ கிலோ ஒன்றின் விலை 400 ரூபாவாக உள்ளது.

இதனால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.