சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் 91 வயதில் காலமானார்

Prasu
2 years ago
சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் 91 வயதில் காலமானார்

சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். 

அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990-ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் இறந்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவரது மறைவுக்கு ரஷிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்