அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற கேரளாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Prasu
3 years ago
அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற கேரளாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வடக்கு அயர்லாந்தில் டெர்ரி நகருக்கு வெளியே எனாக் லக் என்னும் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளிப்பதற்காக நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சென்றுள்ளனர். 

அப்போது அவர்கள் ஏரியில் மூழ்கி குளித்த போது ஆழம் நிறைய இருந்த பகுதியில் சிக்கித் தவித்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு போலீஸருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு அயர்லாந்தின் ஆம்புலன்ஸ், அதிவிரைவு துணை மருத்துவர், அவசர கால பணியாளர்கள் ஆம்புலன்ஸ் அதிகாரி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இந்த நிலையில் ஏரியில் நடைபெற்ற மீட்பு பணியில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருந்தபோதிலும் அந்த மாணவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட இரண்டாவது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 

இந்த நிலையில் மூன்றாவது மாணவர் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மற்ற மூன்று பேரும் எந்தவித பாதிப்பும் இல்லை இருந்தபோதிலும் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என  போலீசார் கூறியுள்ளனர். 

மேலும் உயிரிழந்த இரண்டு மாணவர்களும் இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்திருக்கின்றனர். அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் ரூவன் சைமன் எனவும் மற்றொருவர் ஜோசப் செபாஸ்டின் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

இந்த சம்பவத்திற்கு அயர்லாந்து பிரதமர் மிச்சேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4