ராஜபக்சக்களால் நாடு திவாலானது - சந்திரிகா 

Prathees
3 years ago
ராஜபக்சக்களால் நாடு திவாலானது - சந்திரிகா 

ராஜபக்சக்களால் இலங்கை திவாலானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இந்தியாவின் இந்து நாளிதழுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ச அரசுகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டாளர்களால் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் மீரா சிறினிவாசனுடன் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கங்களின் கொள்கைகளுடன் இந்திய அரசாங்கம் உடன்படவில்லை என்று கூறும் முன்னாள் ஜனாதிபதி, கடந்த காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4