இலங்கை - சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு - இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

Prathees
3 years ago
இலங்கை - சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு - இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இது இன்று (07ஆம் திகதி) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்ட அதிகாரிகள் குழு கடந்த வாரம் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததுடன் பேச்சுவார்த்தை நேற்று (31ம் திகதி) முடிவடைந்தது.

இதன்படி, நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (01) முற்பகல் 11.00 மணிக்கு மத்திய வங்கி தலைமையகத்தில் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை அறிவிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் திரு. பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடத் தலைவர் திரு. மசாஹிரோ நோசாக்கி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

நிதி நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியதன் பின்னர், இலங்கையின் கடனாளிகளுக்கு இந்த வேலைத்திட்டம் வழங்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4