ஒருநாள் செலவுக்கு போதுமான நிதியை மட்டுமே கொண்டிருந்த மத்திய வங்கி!

Mayoorikka
3 years ago
ஒருநாள் செலவுக்கு போதுமான நிதியை மட்டுமே கொண்டிருந்த மத்திய வங்கி!

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஆளுநர் பொறுப்பை ஏற்றபோது, வங்கியில் 20 மில்லியன் டொலர்களே வெளிநாட்டு ஒதுக்கங்களாக இருந்தன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவாக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போது, மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டதாக லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தொகையானது, நாட்டின் ஒருநாள் செலவுக்கு மாத்திரமே போதுமான தொகையாகும். எனினும் இந்த நிலைமையை அந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை.

நல்லாட்சி அரசாங்கம், பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சியை கையளிக்கும் போது மத்திய வங்கியில் 7800 மில்லியன் டொலர்களே இருந்தன.”என நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4