டுவிட்டர் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குப் தீர்வு! ஹர்ஷ த சில்வா

Mayoorikka
3 years ago
டுவிட்டர் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குப் தீர்வு! ஹர்ஷ த சில்வா

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா பொதுமக்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஸ்பேஸ் ஊடாக பதிலளிக்கவுள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா கலந்துகொள்ளும் நேரடிக் கலந்துரையாடல் நாளை (02) முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் (@ParliamentLK - https://twitter.com/ParliamentLK) ஊடாக நடைபெறவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4