AsiaCup 2022 - இலங்கை அணிக்கு 184 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்த பங்களாதேஷ்

#Bangladesh #Srilanka Cricket #T20
Prasu
3 years ago
AsiaCup 2022 - இலங்கை அணிக்கு 184 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்த பங்களாதேஷ்

ஆசிய கிண்ண T20 தொடரின் தற்போது இடம்பெற்றுவரும் 5 ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு 184 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் ஹபிப் ஹொசைன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களையும், மொஹமதுல்லாஹ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4