மத்திய வங்கி ஆளுநருடன் எம்.பி.க்களின் சந்திப்பில் காரசாரம் : ஹர்ஷ உள்ளிட்ட குழுவினர் வெளியேறினர்

Prathees
2 years ago
மத்திய வங்கி ஆளுநருடன் எம்.பி.க்களின் சந்திப்பில் காரசாரம் : ஹர்ஷ உள்ளிட்ட குழுவினர் வெளியேறினர்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையும் முன்னோக்கிச் செல்லும் பாதையும் என்ற தலைப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களால் நேற்று முன்தினம்  (31) கலந்துரையாடல் இடம்பெற்றது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமையஇ நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற இந்த செயலமர்வில்இ நிதி விவகாரங்கள் தொடர்பான எதிர்வரும் பாராளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்குபற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் நாட்டின் தற்போதைய  மற்றும் எதிர்கால பொருளாதார நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை செய்யவிருந்த போது ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் சந்தர்ப்பம் வழங்காமல் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீடு காரணமாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் செயலமர்விலிருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்.