திருத்தப்பட்ட சேவைகளுக்கு வயதெல்லை பொருந்தாது!

Mayoorikka
2 years ago
திருத்தப்பட்ட சேவைகளுக்கு வயதெல்லை பொருந்தாது!

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு  பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதிய அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், சேவை அவசியத்தன்மை அடிப்படையில், சில விசேட சேவைகளுக்கு, கட்டாய ஓய்வு வயதெல்லை, ஓய்வூதிய யாப்பில் நிர்ணயிக்கப்பட்ட, கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயதை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

புதிய இடைக்கால பாதீட்டில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டது.


அது, அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை, 65 ஆக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாதவாறு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.