நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தில் கோட்டாபயவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? - மிலிந்த மொரகொட கருத்து

Prasu
2 years ago
நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தில் கோட்டாபயவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? - மிலிந்த மொரகொட கருத்து

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி விரைவில் நாடுதிரும்புவார் என கருதுவதாக தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட ஆனால் நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தில் கோட்டாபய ராஜபக்சவிற்கு மீண்டும் இடம்கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கான இடத்தை கண்டுபிடிக்கவேண்டும் - அரசியலில் இல்லை, சமூகவிவகாரங்களில் என நான் கருதுகின்றேன் என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் முன்னுதாரணங்களாக மாறமுடியும் உதாரணத்திற்கு பதவியிலிருந்த காலத்தில் செய்ததை விட பதவியில்லாத காலத்தில் செய்த விடயங்களிற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நினைவுகூறப்படுகின்றார் எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடி நீண்டகாலமாக உருவாகிவந்தவொன்று தெரிவித்துள்ள அவர்  ராஜபக்சவின் அணுகுமுறை நெருக்கடிக்கான காரணியாகயிருந்திருக்கலாம் எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

எங்கள் ஜனாதிபதி ஒரு அரசியல்வாதியில்லை என்பதால் எங்கள் முக்கிய அரசியல்கட்சிகள் அவருடன் ஈடுபாட்டை கொண்டிருக்கும் நிலையிலிருக்கவில்லை, அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அரசியலில் ஈடுபடவேயில்லை அரசியல்வாதிகள் அமைப்பிலிருந்து முற்றிலும் விலகவிட்டதாக உணர்ந்தனர் எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துகொண்டிருந்தது இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு எந்த வழியும் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.