167 கோடி ரூபா வருமான வரி மோசடி : அர்ஜுன் அலோசியஸை இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Prasu
2 years ago
167 கோடி ரூபா வருமான வரி மோசடி : அர்ஜுன் அலோசியஸை இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

சுமார் 167 கோடி ரூபா வருமான வரியை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக  கூறப்படும் சம்பவம் தொடர்பில்,  மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புபடுத்தப்பட்ட பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன அலோசியஸை நீதிமன்றில் இன்று ( 2) ஆஜராகுமாறு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான்  பண்டார இலங்கசிங்க இதற்கான   அறிவித்தலை பிறப்பித்தார்.

தேசிய வருமான வரி திணைக்களம்  நீதிமன்றில் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

டப்ளியூ. எம். மெண்டிஸ்  நிறுவனத்தின்  பணிப்பாளர் பதவியை வகித்துக்கொண்டு,  அர்ஜுன அலோசியஸ் என்பவர்  167 கோடியே 87 இலட்சத்து  95 ஆயிரத்து  49 ரூபா (1,678,795,049.00) வரித் தொகையை செலுத்தாது அரசுக்கு மோசடி செய்துள்ளதாக  கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு இந்த முறைப்பாடு முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.