ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையை கூட்டமைப்பு வரவேற்கிறது - இரா.சம்பந்தன்

Kanimoli
2 years ago
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையை கூட்டமைப்பு வரவேற்கிறது - இரா.சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. இது பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் செய்தியாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை விவகாரம் ஜெனிவாவில் இம்முறை எதிரொலிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

இறுதிப் போரில் நடந்த மன்னிக்க முடியாத சம்பவங்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக எந்தப் பிரேரணை வந்தாலும் அதனை முழுமையாக வரவேற்போம்"- என்றார்.

மேலும், அந்தப் பிரேரணையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தங்களையும் கொடுத்து வருவோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்