அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

Kanimoli
2 years ago
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால் இவ்வாறு டொலரின் பெறுமதியை குறைக்க முடியும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.  

பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி  ரூ. 367. 30 உள்ளமை குறிப்பிடத்தக்கது.