அரசியலமைப்புத் திருத்தத்தை ஏகமனதாக நிறைவேற்றிய சுதந்திரக் கட்சி

Prathees
3 years ago
அரசியலமைப்புத் திருத்தத்தை ஏகமனதாக நிறைவேற்றிய சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழு இன்று அரசியலமைப்புத் திருத்தத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

அக்கட்சியின் 71வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

புதிய அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியதோடு, அதற்கு உறுப்பினர்களின் கைகளை உயர்த்தி அங்கீகாரம் வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்கு தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதைக் காண முடியவில்லை.

பின்னர், இந்த பிரேரணையை விரும்பாதவர்கள் கைகளை உயர்த்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆனால் அப்போது யாரும் கையை உயர்த்தி மறுப்பு தெரிவிக்கவில்லை.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக கட்சியின் தலைவருக்கு சர்வாதிகார அதிகாரம் கிடைக்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்டர்கள் நேற்று பிற்பகல் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4