ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் பங்கேற்ற இந்திய ராணுவக் குழுவினர்

#India
Prasu
3 years ago
ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் பங்கேற்ற  இந்திய ராணுவக் குழுவினர்

பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. 

வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 

இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4