பாரிஸில் கணவனை காப்பாற்ற 80 வயது மூதாட்டியின் துணிகர செயல்

Prasu
2 years ago
பாரிஸில் கணவனை காப்பாற்ற 80 வயது மூதாட்டியின் துணிகர செயல்

பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட சொய்ஸி லு றுஆ (Choisy-le-Roi) பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் இரண்டு 84 மற்றும் 79 வயதுடைய தம்பதி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இரு கொள்ளையர்கள் அவர்களை வழி மறித்தனர். 

முதியவரை கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்ட கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்த தொலைபேசிகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட முற்பட்டனர்.

இதனால் முதியவரின் முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் அவ்விடத்திலேயே சரிந்து கீழே விழுந்துள்ளது.

கணவர் தாக்கப்படுவதை பார்த்த மூதாட்டி, தனது பையில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து, கொள்ளையர்களின் ஒருவரை தாக்கியுள்ளார்.

பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதும் கொள்ளையன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அச்சமடைந்த, இரண்டாவது கொள்ளையர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு பொலிஸார் அழைக்கப்பட்டு, வயதான இரு தம்பதிகளும், மயங்கி கிடந்த கொள்ளையரைம் மீட்கப்பட்டு கிறித்தை பகுதியிலுள்ள ஹென்றி-மோன்தோர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கத்திக்குத்துக்கு இலக்கான கொள்ளையனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. 

எனினும் 79 வயதில் வயோதிப பெண்ணின் துணிகரச் செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் வியப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.