ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுச்சக்தி நிலையத்தைச் சுற்றி தீவிர தாக்குதல் நடத்திய ரஷ்யா

#Russia #Attack #Ukraine
Prasu
3 years ago
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுச்சக்தி நிலையத்தைச் சுற்றி தீவிர தாக்குதல் நடத்திய ரஷ்யா

ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுச்சக்தி நிலையம் இருக்கும் உக்ரைனிய நகரான Zaporizhzhiaவை ரஷ்யா தாக்குவதாக கீவ் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இன்று காலையிலிருந்து மொஸ்கோ துருப்புகள் அங்குத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு நகர மேயர் Dmytro Orlov கேட்டுக்கொண்டார். 

இதற்கிடையே, அணுச்சக்தி நிலையத்தில் அனைத்துலக அணுச்சக்தி நிறுவனத்திலிருந்து (International Atomic Energy Agency) 14 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று  இன்று சோதனை நடத்தவிருக்கின்றது. 

அணுவாயுத விபத்துகளைத் தவிர்ப்பது, ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுச்சக்தி நிலையத்தைத் தக்கவைப்பது ஆகிய நோக்கங்களுடன் குழு செயல்படுவதாக நிறுவனத்தின் இயக்குநர் ரஃபாயெல் குரோசி (Rafael Grossi) குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4