புதிய 20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டம்

#SriLanka #Minister
Prasu
2 years ago
புதிய 20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டம்

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பெரும்பாலான உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் 20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

20 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நியமனம் நாளை அல்லது எதிர்வரும் வாரமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றதாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் நிலையான அமைச்சரவையை எதிர்வரும் வாரத்திற்குள் நியமிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது இழுபறி நிலையில் உள்ள நிலையில் நிலையான அமைச்சரவை,இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றதாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்க வழங்கப்பட வேண்டும் ஏனெனில் பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பெரும்பான்மையினை கொண்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஊடக சந்திப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகளை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை என அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் முயற்சி இழுபறி நிலையில் உள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளை கருத்திற்கொண்டு சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய போவதில்லை  என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை கிடையாது.பொருளாதார நெருகக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் மக்களாதரவு அவசியம்.

ஆகவே மக்களாணையை பெற உடன் தேர்தலை நடத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார குமார திஸாநாயக்க குறிப்பிட்டு, மக்களால் வெறுக்கப்படும் தரப்பினருடன் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய முடியாது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தமக்கு இராஜாங்க அமைச்சுக்கள் வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷ ஊடாக ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்திள்ளதற்கமைய எதிர்வரும் வாரம் 20 இராஜாங்க அமைச்சுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.