கடந்த ஆண்டில் ஆண்களின் இறப்பு அதிகரிப்பு

Prathees
2 years ago
கடந்த ஆண்டில் ஆண்களின் இறப்பு அதிகரிப்பு

கடந்த வருடம் (2021) இலங்கையில் 163,936 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறப்பு எண்ணிக்கை 31505 ஆக அதிகரித்துள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு இலங்கையில் உயிரிழந்தவர்களில் 90,836 பேர் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 73,100 ஆகும். 2020 ஆம் ஆண்டில், 132,431 பேர் இறந்தனர், அவர்களில் 72,874 பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 59557. 2020ல் 6.0 சதவீதமாக இருந்த மொத்த இறப்பு விகிதம், 2021ல் 7.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த வருடம் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.