வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் பேருந்து ஓட்டுனர்

Kanimoli
3 years ago
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் பேருந்து ஓட்டுனர்

கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் பேருந்து ஓட்டுனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பணம்
திஸ்ஸமஹாராம ஹக்மன பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

திஸ்ஸமஹாராம பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐந்தரை லட்சம் ரூபா பணம் மற்றும் கைப்பேசி என்பனவே உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்காலை பேருந்து டிப்போவில் கடமையாற்றி வரும் ரீ.ஜீ.பந்துசேன என்ற பேருந்து நடத்துனரும், எச்.எம். குலசிறி என்ற பேருந்து சாரதியும் இந்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம பிரதேச உணவகம் ஒன்றின் முகாமையாளர், சைக்கிளில் பணத்தையும், கைப்பேசியையும் எடுத்து சென்ற வேளையில் அவை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கீழே வீழ்ந்துள்ளது.

பணத்தையும், கைப்பேசியையும் காணவில்லை என குறித்த முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பணம் தொலைக்கப்பட்டு மூன்று மணித்தியால இடைவெளிக்குள் உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4