லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம்

Kanimoli
3 years ago
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருமெனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்கவுள்ளதாக முதித்த பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 99 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தது.

தற்போது லிட்ரோ எரிவாயுவின் விலை மேலும் குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4