ஒவ்வொரு குடும்பமும் நாட்டுக்கு 58 லட்சம் கடன்: பொருளாதார ஆய்வாளர்கள் தகவல்

Prathees
2 years ago
ஒவ்வொரு குடும்பமும் நாட்டுக்கு 58 லட்சம் கடன்: பொருளாதார ஆய்வாளர்கள் தகவல்

இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உற்பத்திச் செயற்பாடுகளுக்கு அரசாங்கங்கள் செயற்படாததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள  தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நாளாந்தம் 2000 ரூபா கடன் சுமையை அதிகரிப்பதாக தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நுகர்வு செலவுகளை ஈடுகட்ட மக்கள் கடன்களை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.