புலம்பெயர் தமிழர்கள் விவகாரத்தை கையாள வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகம் - ஜெனீவாவில் பேச்சுவார்த்தை

Prasu
2 years ago
புலம்பெயர் தமிழர்கள் விவகாரத்தை கையாள வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகம் - ஜெனீவாவில் பேச்சுவார்த்தை

நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

புலம்பெயர்ந்த சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்த அலுவகத்தை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டன அதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை   இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அலுவலகம்காணிவிடயங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் போன்ற விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில்புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகளிற்கு தீர்வை காணும் விடயத்தில் இந்த அலுவலகம் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய அலுவலகம் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தொடர்புகொண்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வின் போது  அரசாங்க பிரதிநிதிகளிற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது அரசாங்கம்புதிய செயலகம் குறித்து புலம்பெயர் அமைப்புகளிற்கு தெளிவுபடுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் இந்தசெயலகம் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்பும்.

2015 அல் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் கீழ் இவ்வாறான அலுவலகமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன ஆனால் அவ்வேளை காணப்பட்ட நிலைமை காரணமாக இது சாத்தியப்படவிலை ஆனால் நாங்கள் இந்த முறை அதனை ஆரம்பிப்பதில் உறுதியாகவுள்ளோம் நீதியமைச்சு  அதற்கு ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.