இலங்கையின் கடன் சுமையை குறைக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்

Prasu
2 years ago
இலங்கையின் கடன் சுமையை குறைக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற  சீனா தயார்

தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைக்கும் முயற்சிகளுக்கு இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய வழமையான செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் லிஜியன் தெரிவித்தார்.

உண்மையான தீர்வுகளைக் காண இலங்கையுடன் கலந்தாலோசித்து தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும், என்று அவர் கூறினார்.

சீனா உட்பட இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய அனைத்து நாடுகளையும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசூகி விடுத்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.