வலிகாமத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3பேர் படுகாயம்

Prathees
3 years ago
 வலிகாமத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் வலிகாமத்தில் இன்று இடம்பெற்றகோர விபத்தில்  03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வலிகாமம் சிறுப்பிட்டியின் சந்திக்கு அருகாமையில் இன்று (04) மாலை 05.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் மற்றும் மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது...

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4