நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுவதை இரண்டாவது முறையாக கைவிட்டது நாசா

Prasu
3 years ago
நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுவதை இரண்டாவது முறையாக கைவிட்டது நாசா

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடங்கியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக தற்போதைய நிலவின் சூழல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. 

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. 

பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு 11.47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவை நாசா பொறியாளர்கள் கண்டறிந்தனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது. 

ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ராக்கெட்டை ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து ராக்கெட் ஏவும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக 2வது முறையாக நாசா அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4