ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிப்பு

Prasu
3 years ago
ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிப்பு

ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதை வடிவ எலும்பு துண்டுகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்துள்ளது. 

இதனை அவர் அரசுக்கு கூறியுள்ளார் இதனை அடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017ல் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக போர்ச்சுக்களில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். 

இந்த எலும்புக்கூட்டின் மேல் ஜுராசிக் வண்டல அடுக்குகள் இருந்துள்ளது இதன் மூலமாக 150 மில்லியன் வருடங்கள் வயதான எலும்புக்கூடுகள் இவை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 

மேலும் இந்த மாத தொடக்கத்தில் அகழ்வாராய்ச்சி தளத்திலிருந்து சானிய மற்றும் போர்த்துக்கீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள் பிராச்சியோசவுரிட் சவ்ரோபாட் என நம்பும் முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகளை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு மற்றும் அனைத்து டைனோசர்களிலும் மிகப்பெரியது சோரோபாட் அல்லது சவ்ரோபாட் ஆகும். 

மிக நீண்ட கழுத்து, நீண்ட வால், பெரிய உடல் மற்றும் சிறிய தலை கொண்ட ஒரு தாவரத்தை உண்ணும்  டைனோசர் அதன் கழுத்து முதுகெலும்புகளில் சில சிறப்பு குணாதிசயங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது ஒரு விலங்கின் அனைத்து விலா எலும்புகளும் இந்த நிலையில் இருப்பது ஒரு புறம் இருக்க அவற்றின் அசல் உடற்கூறிய நிலையை பேணுவது வழக்கமல்ல என லிஸ்பன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலிசபெத் மாலாபாயா கூறியுள்ளதாக தி கார்டியன் பத்திரிக்கை செய்து வெளியிட்டு இருக்கிறது. 

போச்சுகளில் உள்ள தோட்டத்தின் முற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் அளவின்படி டைனோசர் 12 மீட்டர் உயரமும் 25 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும் என தீர்மானிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4