ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - சீன தூதரகம் எச்சரிக்கை

Prasu
3 years ago
ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - சீன தூதரகம் எச்சரிக்கை

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான  நான்சி பெலோசி கடந்த மாதம் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. 

ஆனாலும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்தல் தொடர்ந்து தைவானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன்  தைவானுக்கு 8 ஆயிரத்து 688 கோடி ரூபாய் மதிப்பிலான  ராணுவ ஆயுதங்களை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போர் கப்பல்களை தாக்கி அளிக்கக்கூடிய ஹார்பூ   ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் நிறுத்தி  தாக்கி அளிக்கும் சைட்விண்டர் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் தைவானுக்கு அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த செயலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எச்சரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4