புதிதாக பரவும் லெஜியோனேயர்ஸ் நோய் - அர்ஜென்டினாவில் 4 பேர் பரிதாப உயிரிழப்பு

Prasu
3 years ago
புதிதாக பரவும் லெஜியோனேயர்ஸ் நோய் - அர்ஜென்டினாவில் 4 பேர் பரிதாப உயிரிழப்பு

அர்ஜென்டினா நாட்டின்  வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கல் 4 பேர்    லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த  லெஜியோனேயர்ஸ்  நோய் என்பது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு நிமோனியா நோயாகும். 

இது முதல் முதலில் 1976-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் நடைபெற்ற  படைவீரர் குழுவின் கூட்டத்தில் தோன்றியது. 

இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் மற்றும் அசுத்தமான ஏர் கண்டிஷனிங்  அமைப்புகளில் இருந்து பரவுகிறது.

மேலும் அதே கிளினிங்கில்  அறுவகை சிகிச்சை செய்து கொண்ட 70 வயது பெண் ஒருவரும் மற்றும் 48 வயதான ஒருவர் இறந்துள்ளார். 

இந்நிலையில்  டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு முதலில் கொரோனா, சளி மற்றும் ஹண்டா வைரஸ் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின்னர் நடத்திய பரிசோதனையில் அவர்களுக்கு  லெஜியோனேயர்ஸ்  பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியானது. 

இந்த தொற்று உள்ளவர்களுக்கு அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4