தன் இரு குழந்தைகளை கொலை செய்து அழுகிய உடல்களை 15 நாட்கள் படுக்கையில் பாதுகாத்த தாய்

#Murder
Prasu
3 years ago
தன் இரு குழந்தைகளை கொலை செய்து அழுகிய உடல்களை 15 நாட்கள் படுக்கையில் பாதுகாத்த தாய்

தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து அழுகிய உடல்களை 15 நாட்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டில் குராபுவா என்ற பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தமது பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த 31 வயதான Eliara Paz Nardes, தினசரி வேலைக்கும் சென்றுள்ளார், குடியிருப்பை சுத்தம் செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது.

ஆனால், தமது சட்டத்தரணி நண்பர் ஒருவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு உதவி கோரிய நிலையில், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் கடந்த மாதம் 27ம் திகதி சிறார்கள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

சுமார் இரண்டு வார காலம் சிறார்களின் சடலங்கள் அவரது குடியிருப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தமது பிள்ளைகளுக்கு உதவ தம்மால் முடியாமல் போனதன் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக அந்த தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பிள்ளைகள் இருவரையும் ஒரே நாள் கொன்றதாக பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளார். ஆனால், முன்னெடுக்கப்பட்ட சோதனையில், ஒருவர் 13ம் திகதியும் இன்னொருவர் 17ம் திகதியும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது அவர் மீது மூன்று பிரதான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4