கோட்டாபயவை பிரதமராக நியமிப்பது பற்றி எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை - ருவன் விஜேவர்தன

Kanimoli
2 years ago
கோட்டாபயவை பிரதமராக நியமிப்பது பற்றி எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை - ருவன் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை வழங்குவது பற்றியோ எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மத வைபவம் ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.  

கோட்டாபய ராஜபக்ச அரசியலில் நீடிப்பதா இல்லையா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.