யால தேசிய பூங்கா  இந்த முறை மூடப்படவில்லை - இது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும்

Prathees
2 years ago
யால தேசிய பூங்கா  இந்த முறை மூடப்படவில்லை - இது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும்

யால தேசிய பூங்கா ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் தொடக்கத்தில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு மூடப்பட்டாலும், இந்த வருடம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பூங்கா திறக்கப்படும் என யால தேசிய பூங்கா காப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.

வறண்ட காலங்களில் வன விலங்குகளின் துன்பத்தை குறைக்கவும், நீர் சேகரிப்பு நிலையங்களை நிரப்பவும், பூங்காவின் பராமரிப்புக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் யால மூடப்பட்டதாக பூங்கா பாதுகாவலர் கூறினார்.

யால தேசிய பூங்காவில் உள்ள பல அணைக்கட்டுகள் கடந்த காலங்களில் புனரமைக்கப்பட்டுள்ளதால் வறட்சியான காலங்களில் வன விலங்குகளுக்கு போதிய நீர் வழங்குவதுடன் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால் பூங்கா திறந்து வைக்கப்படவுள்ளது.

பூங்காவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என  பூங்கா பாதுகாவலர்  குறிப்பிட்டார்.