பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக பலி

Kanimoli
3 years ago
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக பலி

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர்.

பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பதாக அவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.

சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (03) அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீட்டிற்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (05-09-2022) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்பு தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4