கனடா செல்ல தயாராக இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது

Kanimoli
3 years ago
கனடா செல்ல தயாராக இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது

கனடா செல்ல தயாராக இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொல்லம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் இருந்த போது, ​​கேரள பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா விசாவில் தமிழகம் சென்ற இரு இலங்கையர்கள் கடந்த வாரம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இருவர் மற்றும் அகதிகளாக இந்தியா வந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் படகு ஒன்றின் உதவியுடன் கனடா செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4