அநுராதபுரத்தில் போதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட பாடசாலை மாணவி மற்றும் மாணவர்கள் பிணையில் விடுதலை

#SriLanka #Student #drugs #Arrest
Prasu
3 years ago
அநுராதபுரத்தில் போதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட பாடசாலை மாணவி மற்றும் மாணவர்கள் பிணையில் விடுதலை

அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் கும்பிச்சாங்குளம் ஏரிக்கரை அருகே குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அநுராதபுரம் அரச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரையும் மூன்று மாணவர்களையும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் தனித்தனியாக விடுதலை செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக ஜயசூரிய உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் மற்றும்மாணவர்களின் பெற்றோரை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்ட பிரதான நீதவான், சந்தேகத்திற்குரிய மூன்று மாணவி மற்றும் மாணவர்களையும் அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய மாணவி மாத்திரம் பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக சட்டத்தரணி சஞ்சய் ரத்நாயக்க ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் மதுபோதையில் இருந்தமை தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4