நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி உள்ளனர்: அனுரகுமார திசாநாயக்க எம்.பி

Mayoorikka
2 years ago
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி உள்ளனர்: அனுரகுமார திசாநாயக்க எம்.பி

மக்களை மேலும் பாதிப்படைய செய்யும் வகையில் மற்றுமொரு புதிய வரியை நடைமுறைப்படுத்தவுள்ளனர் என்று இந்த புரிய
வரியானது நாட்டில் சகல துறைகளையும் பாதிப்படைய செய்ய போகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (6) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது சகலரும் அறிந்ததே. பொருளாதார வீழச்சியானது சாதாரண மக்களின்
அன்றாட வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

எனினும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது திணிப்பது மட்டுமே தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம் அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு என பாரியளவில் நெருக்கடிகளை மக்கள் மீது திணித்துள்ளனர்.

கடந்த வாரமளவில் நூற்றுக்கு 8 சதவீதமாகக் காணப்பட்ட வட் வரி நூற்றுக்கு 12 ஆகவும் அதன் பின்பு நூற்றுக்கு 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட் வரி அதிகரிப்பு, மக்கள் அத்தியாவசிய சேவையை பெற்றுக்கொள்வதிலும் அதேபோன்று அத்தியவாசிய பொருட்களை
பெற்றுக்கொள்வதிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், தற்போது புதிய வரி தொடர்பில் பேசப்படுகின்றது. இந்த புதிய வரி அறிமுகம் கூட மீண்டும் சாதாரண மக்களையே பாதிப்படைய செய்ய போகின்றது.

உண்மையில் இது நியாயம் என்றா நான் கேட்கின்றேன். சாதாரண மக்கள் மத்தியில் சுமையை சுமத்தாது மக்கள் குறித்து சிந்திக்க
வேண்டும் என்று சுசில் பிரேமஜயந்த கூறியதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

அதற்கு பதிலாக தொடர்ச்சியாக என்ன செய்கின்றீர்கள் என்றே நான் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய வங்கியில் நாணய இருப்பு பூஜ்ஜியமாகியுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?