8 வயதை சேர்ந்த இரட்டையர்களான சகோதரனும் சகோதரியும் அவர்களது 18 வயது மூத்த சகோதரியும் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை

Kanimoli
2 years ago
 8 வயதை சேர்ந்த இரட்டையர்களான சகோதரனும் சகோதரியும் அவர்களது 18 வயது மூத்த சகோதரியும் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை

 8 வயதை சேர்ந்த இரட்டையர்களான சகோதரனும் சகோதரியும் அவர்களது 18 வயது மூத்த சகோதரியும் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தப் படுகொலைகள் குறித்து திங்கட்கிழமை (05.09.2022) பிரித்தானிய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் லிஸா காஷ் (18 வயது), அவரது இரட்டைச் சகோதர சகோதரிகளான கிரிஸ்ரி மற்றும் செல்ஸீ காவ்லே ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து வெளியான தகவல்

மேற்படி சகோதர சகோதரிகளுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என அறியப்படும் 24 வயது தாக்குதல்தாரி முதலில் இரட்டையர்களை இலக்குவைத்து கத்திக் குத்தை நடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களைக் காப்பாற்றப் போராடிய லிஸா மீது கத்திக் குத்தை நடத்திய தாக்குதல்தாரி லிஸாவை மாடிப் படிகளிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரட்டைச் சகோதரர்கள் மீது கத்திக் குத்தை நடத்திய தாக்குதல்தாரி அவர்களை மாடி ஜன்னல்களால் வெளியே தூக்கி வீசியுள்ளான்.

தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்ற தாக்குல்தாரி அவனது சொந்த நகரான தல்லாக்ட்டிலுள்ள ஜொப்டவுணில் வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடித்துக் கைதுசெய்யப்பட்டுள்ளான். அவன் மீது கொலை, கொள்ளை உள்ளடங்கலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவத்தின் போது உயிரிழந்த சகோதர சகோதரிகளின் 14 வயதான சகோதரன் ஒருவாறு அங்கிருந்து ஜன்னலொன்றினூடாக தப்பிச் சென்று அயலவர்களிடம் உதவி கோரியுள்ளான். இனையடுத்து அயலவர்கள் அந்த வீட்டிற்கு கீழே கூடியபோதே கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த இரட்டையர்கள் இருவரையும் தாக்குதல்தாரி ஜன்னலால் வீசியுள்ளான்.